கோவை, திருப்பூரில் நாளை கனமழை கொட்டும் என தகவல்

1பார்த்தது
கோவை, திருப்பூரில் நாளை கனமழை கொட்டும் என தகவல்
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று (மே 29) கனமழை பெய்யக்கூடும். மேலும், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திருச்சி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் நாளை (மே 30) கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.