அவிநாசி அருகே சேவூர் புளியம்பட்டி சாலையில், சுரங்கம் மற்றும் கனிமவளத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், உரிய அனுமதியின்றி ஜல்லி கற்கள் கடத்திச் சென்ற லாரியை போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.