விபத்து போல சித்தரித்த கொலை – அவிநாசியில் பரபரப்பு

1768பார்த்தது
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே சின்னேரிபாளையத்தில் சாலையோர பள்ளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு, விபத்து போல சித்தரிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு துணை காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டார். உடலின் மீது இருந்த இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் விவரங்கள் தெளிவாக இல்லை. கொலையாளி யார், காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி