தேசிய பேரிடர் பாதுகாப்பு குழுவினர் ஆய்வு

0பார்த்தது
தேசிய பேரிடர் பாதுகாப்பு குழுவினர் ஆய்வு
பெருமாநல்லூரில் அதானி டோட்டல் கியாஸ் நிறுவனம் அமைத்துள்ள கியாஸ் சேமிப்பு கிடங்கை தேசிய பேரிடர் பாதுகாப்பு குழு கமாண்டோ வாணி ரமணா தலைமையிலான குழுவினர் நேற்று வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். எரிவாயு குழாய் பதிக்கப்பட்டுள்ள இடங்களையும் பார்வையிட்டு, பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த ஆய்வில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறை இன்ஸ்பெக்டர் நவீந்திரன் முத்துசாமி, அவினாசி தாசில்தார் விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். எரிவாயு குழாயில் எதிர்பாராத விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி