கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு கூட்டம் தெக்கலூர் கொங்கு வேளாளர் கலையரங்கில் நடைபெற்றது. கூட்டமைப்பின் தெக்கலூர் கிளை தலைவர் பொன்னுசாமி தலைமை தாங்கினார். கிளை தலைவர்கள் பூபதி (சோமனூர்), முத்துசாமி (அவினாசி), பாரதி வேலுசாமி (கண்ணம்பாளையம்), ராமசாமி (பெருமாநல்லூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கோவை கலெக்டர் அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 20-ந்தேதி நடந்த பேச்சுவார்த்தையில் 10 மற்றும் 15 சதவீதம் கூலி உயர்வு அறிவித்து 21-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்த ஜவுளி உற்பத்தியாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் முழுமையாக கூலி உயர்வு வழங்கவில்லை. எனவே, அறிவித்த கூலி உயர்வை நடைமுறைப்படுத்த வேண்டும். ஒரு வாரகாலத்தில் நடத்தி விசைத்தறியாளர்கள் கருத்தை கேட்டறிந்து அடுத்த கட்ட போராட்டத்தை தீர்மானிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.