மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம்

6பார்த்தது
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம்
ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் காவுத்தாம்பாளையத்தில் உள்ள 32 அடி உயரமான ஒரே கல்லால் ஆன நடுகல் மற்றும் அதைச் சுற்றியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதிகளை தொல்லியல் துறையின் கீழ் பாதுகாக்கப் பட்ட பகுதியாக அறிவிக்கக் கோரி மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் துணை மின்நிலையம் அமைய உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கக் கோரப்படுகிறது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், ஊத்துக்குளி அருகே சாமியார்பாளையம் கோவில் மண்டபத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் ஜெயக்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பா.ஜனதா, தே.மு.தி.க., அ.தி.மு.க. மற்றும் போராட்டக் குழுவினர் கலந்து கொண்டனர்.