அவினாசி அருகே பழங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட பச்சாம்பாளையம் பகுதியில் 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஆற்றுக்குடிநீர் சீராக வழங்கப்படுவதில்லை. மேலும் டேங்கர் ஆப்ரேட்டரை மாற்ற வேண்டும் எனக் கோரி அப்பகுதி மக்கள் பழங்கரை ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் நடராஜன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
தகவலறிந்து சம்பவயிடத்துக்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், போலீசார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஒருசில நாட்களுக்குள் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.