அவினாசி அருகே பச்சாம்பாளையம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி மாதேஸின் மகன் கதிர்அரசு (11), அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று மாலை ரங்காநகர் பகுதியில் சென்றபோது, சின்னேரிபாளையம் தனியார் பள்ளி வாகனம் அவன் மீது மோதி காயப்படுத்தியது. காயமடைந்த மாணவன் அணைப்புதூர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இது குறித்து அவினாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.