குன்னத்தூர் பேரூராட்சி பகுதிகளில் மொத்த வியாபாரிகள் ஆட்டோக்களில் சரக்குகள் கொண்டு வந்து சாலையோரங்களில் தற்காலிக வியாபாரம் செய்வதால், முறையாக கடைகள் வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் பேரவை குற்றம் சாட்டியுள்ளது. மாவட்டத் தலைவர் ஆத்திசெல்வன் தலைமையில் உறுப்பினர்கள் குன்னத்தூர் பேரூராட்சி தலைவர் கொமரசாமி மற்றும் செயல் அலுவலரிடம் இது குறித்து மனு அளித்துள்ளனர். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மொத்த வியாபாரிகள் வியாபாரம் செய்வதால் வாடகை கட்டணம் செலுத்தும் வியாபாரிகள் பெரிதும் பாதிப்படைவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.