திருமுருகன்பூண்டி: உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

69பார்த்தது
திருமுருகன்பூண்டி: உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்
திருமுருகன்பூண்டி நகராட்சி 12 மற்றும் 13-வது வார்டு பொதுமக்களுக்கான 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் பாலாஜிநகரில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டு மனுக்களை வழங்கினர்.  முகாமில் மொத்தம் 568 மனுக்கள் பெறப்பட்டன. முன்னதாக சிறப்பு முகாமை திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் தி.மு.க. நகரச் செயலாளர் மூர்த்தி, நகராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி