திருப்பூர் வனச்சரக அதிகாரிகள், கருவலூரில் கருப்பசாமி என்பவர் வீட்டில் சாம்பல் நிற கீரிப்பிள்ளை வளர்த்து வந்ததைக் கண்டுபிடித்தனர். வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், சட்டவிரோதமாக வன உயிரினத்தை உடைமைப்படுத்தி வளர்த்த குற்றத்திற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட கீரிப்பிள்ளை காப்புக்காட்டில் விடுவிக்கப்பட்டது. பொதுமக்கள் வன உயிரினங்களை வளர்க்க வேண்டாம் என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.