ஈரோடு பகுதியைச் சேர்ந்த அலிகான் (24) மற்றும் தில்சர் (22) ஆகியோர் வெள்ளக்கோவில் அருகே அர்ஜூன் குமார் என்பவரின் கட்டடத்திற்கு லேசர் கட்டிங்
வேலை செய்யச் சென்றனர். இரவில் தங்கி
வேலை செய்யுமாறு அர்ஜூன் குமார் கூறிய நிலையில், அலிகானும் தில்சரும் காலையில் முடிப்பதாக தெரிவித்துள்ளனர். பணத்தை ஏமாற்றிவிட்டு செல்வதாக எண்ணிய அர்ஜூன் குமார் தரப்பினர் அவர்களைத் தாக்கி, கற்களால் எறிந்துள்ளனர். பயத்தில் தில்சர் ஓடும்போது அருகில் இருந்த கிணற்றில் விழுந்து உயிரிழந்தார்.