வெள்ளகோவில்: குடும்ப தகராறில் பெண் தற்கொலை; போலீஸ் விசாரணை

0பார்த்தது
வெள்ளகோவில்: குடும்ப தகராறில் பெண் தற்கொலை; போலீஸ் விசாரணை
வெள்ளகோவில் அருகே, குமரேசன்-சோபியா தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில், சோபியா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று (மே 26) ஏற்பட்ட சண்டையால் சோபியா வீட்டிற்குள் சென்று கதவை உள்பக்கமாக தாழிட்டுக்கொண்டார். கணவர் கதவை தட்டியும் திறக்காததால், வீட்டின் மேல் ஏறி பார்த்தபோது சோபியா தூக்கில் தொங்கியது தெரியவந்தது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி