திருப்பூர்: துண்டு துண்டாக ஒருவர் வெட்டி படுகொலை

581பார்த்தது
திருப்பூர்: துண்டு துண்டாக ஒருவர் வெட்டி படுகொலை
அவினாசி நேரு வீதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 43). தொழிலாளி. கருவலூர் காளிபாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி (54). இவர்கள் இருவரும் உறவு முறையில் அண்ணன்- தம்பி ஆவர். கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதி முதல் கோவிந்தசாமியை காணவில்லை என்று அவரது மகன் பிரவீன் குமார் அவினாசி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். 

புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் கோவிந்தசாமியை துண்டு துண்டாக வெட்டி ரமேஷ் கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக ரமேசை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து ரமேசை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக் கலெக்டர் கிறிஸ்துராஜிக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து ரமேசை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். 

அதன்படி ரமேஷ் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார். அதற்கான உத்தரவு கோவை சிறையில் இருக்கும் ரமேசிடம் கொடுக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி