அவினாசி அருகே தெக்கலூரில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில்
வேலை பார்த்து வரும் 50-க்கும் மேற்பட்ட வெளிமாநில பெண்கள் தங்கி இருந்த விடுதிக்குள் மர்ம நபர் ஒருவர் புகுந்து, பெண்கள் வைத்திருந்த 10-க்கும் மேற்பட்ட செல்போன்களை திருடிச் சென்றார். இது குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பவானிசாகர் பகுதியைச் சேர்ந்த லால்மகேந்திரன் (வயது 19) என்பவரை கைது செய்தனர்.