ஊத்துக்குளி: தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

53பார்த்தது
ஊத்துக்குளி: தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
ஊத்துக்குளி அருகே உள்ள கருநம்பதி ஒத்தப்பனை மேடு மகாலட்சுமி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 36). இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மது பழக்கத்திற்கு அடிமையான சுரேஷ் அடிக்கடி வீட்டுக்கு மது அருந்திவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சுரேஷுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மது அருந்துவதை கைவிடும்படி கண்டிப்பாக உள்ளனர். சம்பவத்தன்று சுரேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி