
தாராபுரத்தில் அதிமுக சார்பில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர சிறுபான்மை பிரிவு, 5 மற்றும் 6-வது வார்டு அதிமுக சார்பில் ரமலான் நோன்பு இப்தார் நிகழ்ச்சி தாராபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அவை தலைவர் காமராஜ், தாராபுரம் நகரச் செயலாளர் சி.ஆர். ராஜேந்திரன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட இணை செயலாளர் பங்கு மகேஷ் குமார், மாவட்ட மாணவர் அணி துணை செயலாளர் ஜாகிர் அப்பாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


































