அவிநாசி: தனியார் விடுதியில் பெண்கள் கைப்பேசிகள் திருட்டு: ஒருவர் கைது

1பார்த்தது
அவிநாசி: தனியார் விடுதியில் பெண்கள் கைப்பேசிகள் திருட்டு: ஒருவர் கைது
அவிநாசி அருகே தெக்கலூரில் உள்ள தனியார் பனியன் நிறுவன விடுதியில் தங்கியிருந்த 50-க்கும் மேற்பட்ட வெளிமாநில பெண்களிடம் இருந்து 10-க்கும் மேற்பட்ட கைப்பேசிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது தொடர்பாக அவிநாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, இருவரை ஏப்ரல் 4-ஆம் தேதி கைது செய்தனர். இந்நிலையில், அவிநாசி-சேவூர் சாலையில் வாகனச் சோதனையின்போது சந்தேகத்துக்கு இடமளித்த லால் மகேந்திரன் (18) என்பவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். அவரும் தெக்கலூர் விடுதியில் கைப்பேசிகள் திருடிய வழக்கில் தொடர்புடையவர் என தெரியவந்தது.