திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தனியார் கல்லூரி வளாகத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு நின்ற சங்கர் குமார் என்பவரை விசாரித்ததில், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சங்கர் குமாரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.