தாராபுரம்: தீக்குளித்து மூதாட்டி தற்கொலை

2003பார்த்தது
தாராபுரம்: தீக்குளித்து மூதாட்டி தற்கொலை
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் 80 வயதான காளியம்மாள் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். உடல் கருகிய நிலையில் தண்ணீர் தொட்டி அருகே கிடந்த அவரது சடலத்தை போலீசார் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் அவர் தற்கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. காலில் ஏற்பட்ட காயத்தால் ஒரு காலை அகற்ற வேண்டியிருந்த மன உளைச்சலே தற்கொலைக்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி