கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்பு

4பார்த்தது
கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்பு
தாராபுரம் அருகே எல்.ஐ.சி. நகர் பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த சரஸ்வதி (45) என்பவர், நேற்று எதிர்பாராதவிதமாக 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தார். கிணற்றில் சுமார் 20 அடிக்கு தண்ணீர் இருந்த நிலையில், அவரை தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு உயிருடன் மீட்டனர். பின்னர் அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி