ஈரோடு: கீழ்த்தரமான அரசியல்.. தவெகவை விளாசிய இபிஎஸ்

3348பார்த்தது
ஈரோடு: கீழ்த்தரமான அரசியல்.. தவெகவை விளாசிய இபிஎஸ்
அதிமுகவின் பெருந்துறை ஜெயகுமார், தாராபுரம் சத்யபாமா, மதுராந்தகம் மரகதம் குமரவேல் எம்.எல்.ஏக்கள் இன்று ராஜினாமா செய்துவிட்டு தங்களை தமாகாவில் இணைத்துக்கொண்டனர். இந்தநிலையில், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தமாகாவை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "கீழ்தளத்தில் ராஜினாமா! மேல்தளத்தில் கட்சியில் இணைப்பு! தமிழ் நாட்டில் கீழ்த்தரமான அரசியலை, குதிரை பேர கலாச்சாரத்தை அறிமுகப்படுத்திய தமிழக வெற்றிக் கழகத்திற்கு கடும் கண்டனம். அதிமுகவை அசைத்து பார்க்க நினைத்தால் அது பகல் கனவாகவே இருக்கும்" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி