திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே நஞ்சியம்பாளையம் கிராமத்தில், ஹோட்டல் கடை உரிமையாளர் குப்புசாமியின் மகன் அர்ஜுனன் (49) உடுமலை சாலையில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்றுவிட்டு திரும்பும்போது, எதிரே வந்த லாரி மோதி படுகாயமடைந்தார். தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.