திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கனமழை காரணமாக கொழிஞ்சி வாடியைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி முருகானந்தத்தின் வீடு இடிந்து சேதமடைந்தது. இதில் வீட்டில் இருந்த சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீடு சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.