திருப்பூர் சந்தைப்பேட்டையில் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக தெற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ரோந்து சென்ற போலீசார் சந்தேகத்திற்கிடமான சுரேஷ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (50) என்பதும், 3-ம் நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.