தாராபுரம் ஊராட்சி ஒன்றியம், கவுண்டச்சிபுதூர் ஊராட்சி, கொண்டரசம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய பொதுநிதி மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ. 74.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ. 17.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 60,000 லிட்டர் மேல்நிலைத்தொட்டி, 15-வது நிதிக்குழு மான்யம் திட்டத்தின் கீழ் ரூ. 39.38 இலட்சத்தில் தொப்பம்பட்டி ஊராட்சி மடத்துப்பாளையத்தில் புதிய துணை சுகாதார நிலையம் மொத்தம் ரூ. 1.30 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும். கவுண்டச்சிபுதூர் ஊராட்சி, கொண்டரசம்பாளையத்தில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 2.07 கோடியில் நாதம்பாளையம் ஊராட்சி, அக்கரைப்பாளையம் சாலை முதல் குமாரசாமிகோட்டை சாலை வரையிலும், ரூ. 69.28 இலட்சம் மதிப்பீட்டில் கொங்கூர் ஊராட்சி, தாசநாயக்கன்பட்டி அப்பனூத்து சாலை முதல் மாவட்ட எல்லை வரையிலும், ரூ. 45.97 இலட்சம் மதிப்பீட்டில் கொண்டரசம்பாளையம் ஊராட்சி, கொண்டரசம்பாளையம் முதல் கொட்டாபுளிப்பாளையம் வரையிலும், நபார்டு திட்டத்தின் கீழ் ரூ. 1.02 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப்பணிகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் துவக்கி வைத்தார்.