திருப்பூர்: தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த திமுகவினர்

2பார்த்தது
திருப்பூர்: தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த திமுகவினர்
தாராபுரத்தில், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் கராத்தே கோவிந்தராஜ் தலைமையில், 50க்கும் மேற்பட்ட திமுகவினர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். தெற்கு நகர செயலாளர் அபுத்தாஹீர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை மாவட்ட வாக்கு சாவடி அமைப்பாளர் சுஜித் ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்வில் மாவட்ட கலை பிரிவு அணி அமைப்பாளர் லக்ஷ்மணன், தாராபுரம் வடக்கு நகர செயலாளர் ராமேஷ் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி