தாராபுரத்தில் கால்வாய் அமைக்கும் பணி நகராட்சி தலைவர் ஆய்வு

84பார்த்தது
தாராபுரத்தில் கால்வாய் அமைக்கும் பணி நகராட்சி தலைவர் ஆய்வு
தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 23வது வார்டு பகுதியில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தாராபுரம் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் நேரில் சென்று கால்வாய் கட்டுமான பணிகள் ஆய்வு செய்தார். 

இந்த ஆய்வின் போது திமுக நகர செயலாளரும் 23வது வார்டு நகர மன்ற உறுப்பினருமான முருகானந்தம் கலந்து கொண்டார். 23வது வார்டு நகர மன்ற உறுப்பினர் அளித்த கோரிக்கையின் அடிப்படையில் கால்வாய் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வில் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி