திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஜெபராஜ், வடமாநிலத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை வாடகைக்கு ஏற்றிச் சென்றார். பயணத்தின்போது, ஓட்டுநருக்கும் இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த இளைஞர்களில் ஒருவர் ஓட்டுநரின் தலையைப் பிடிக்க, மற்ற இருவரும் அவரது கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடினர். அருகில் இருந்தவர்கள் ஓட்டுநரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வடமாநில இளைஞர்களைத் தேடி வருகின்றனர்.