தாராபுரத்தில் கஞ்சா விற்ற வட மாநில வாலிபர் கைது

6பார்த்தது
தாராபுரத்தில் கஞ்சா விற்ற வட மாநில வாலிபர் கைது
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் இந்திரா நொச்சிபாளையம் பகுதியில் சோதனை மேற்கொண்டார். அப்போது பஸ் நிறுத்தும் பகுதியில் நின்று கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிந்து குமார் ராம் என்ற வாலிபரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி