தாராபுரத்தில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் பெருமாள் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. தாராபுரத்தில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு அனுமந்தாபுரம் கல்யாண ராமர் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தாராபுரம் அகஸ்தீஸ்வரர் கோயிலில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர பெருமாள் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு பூதேவி ஸ்ரீதேவி தாயாருடன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.