மூலனூர்: குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்

61பார்த்தது
மூலனூர்: குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்
மூலனூர் மாதிரிப் பள்ளி அருகே தாராபுரம் செல்லும் காவிரிக் கூட்டுக்குடிநீர் பிரதான குழாய் உடைந்து பலநாட்களாக குடிநீர் வீணாகி வருகிறது. சாலையோரமாக குளம்போல தேங்கி நிற்கும் தண்ணீரில் வீசப்படும் குப்பைகள் அதில் விழுந்து தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே குடிநீர் வடிகால் வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.