தாராபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

2440பார்த்தது
தாராபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 1, 2, 4 ஆகிய வார்டு பகுதிகளுக்கான 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் முஸ்தபா தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன், திமுக நகர செயலாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை அளித்தனர். மேலும், இரண்டு பேருக்கு பிறப்புச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்த முகாமில் பல்வேறு அரசு அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி