திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே இச்சிபட்டி கிராமத்தில் விவசாயியின் ஆட்டை திருட முயன்ற இரு வாலிபர்களை கிராம மக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து ஊதியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தாராபுரத்தை சேர்ந்த ஜீவானந்தம் மற்றும் கோகுல்ராஜ் என இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.