திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கோவிந்தாபுரத்தில் நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாயை கொள்ளையடித்த மர்மநபர்கள் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர தேடுதல் வேட்டை நடத்தி மூன்று முகமூடி கொள்ளையர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.