திருப்பூர் மாவட்டம் அவினாசியில், டிசம்பர் 1ஆம் தேதி ரமேஷ் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக 5 பேர் கைதான நிலையில், வழக்கில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதன்படி ரமேஷ் மனைவி விஜயலட்சுமிக்கும், பேக்கரி உரிமையாளர் சையது என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்தது. இவர்களின் உறவுக்கு ரமேஷ் இடையூறாக இருந்ததால் கூலிப்படையை ஏவி சையது உதவியுடன் விஜயலட்சுமி கணவரை கொன்றது தெரியவந்தது. இதையடுத்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.