திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் இந்திய செயற்கை கால் உற்பத்தி கழகம் இணைந்து சிறப்பு மதிப்பீட்டு முகாம் நடத்தியது. இந்த முகாமில் 250க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர். அவர்களின் உடல்நிலை மதிப்பீடு செய்யப்பட்டு, தேவையான உதவி உபகரணங்கள் வழங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டது. மேலும், தனித்துவ அடையாள அட்டை பதிவு செய்யும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.