திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி தளி சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்திற்கு அருகில் உள்ள சுரங்கப்பாதை வழியாக பாலாஜி நகர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். தற்போது இந்த சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் இதனை உடனடியாக பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.