தாராபுரத்தில் தொழிலாளர் சம்மேளனம் வலியுறுத்தல்

1352பார்த்தது
திருப்பூர் மண்டல அளவிலான அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் மண்டல செயற்குழு கூட்டம் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்றது. பணி ஓய்வு பெற்ற மாவட்டத் துணைத் தலைவர் இன்பசேகரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற 98 ஆயிரம் ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்காமல் உள்ளதை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி