திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், தமிழக வெற்றிக் கழகம் தாராபுரம் தெற்கு நகரம் சார்பில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பேருந்து நிலையத்தில் நகர கழக செயலாளர் அபுத்தாஹீர் தலைமையில் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 150-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டன. மாவட்ட தொண்டரணி இணை அமைப்பாளர் நவமணி, நகர கழக இணைச் செயலாளர் அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போக்குவரத்து சங்க நிர்வாகிகள், தெற்கு, வடக்கு நகர நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.