தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இன்று கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்தநிலையில் ஈரோடு, நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி, சேலம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று(ஜூ.4) நாளை(ஜூ.5) ஆகிய தேதிகளில் கனமழை அறிவிக்கப்பட்டுள்ளது.