வெள்ளகோவில் திருமண மண்டபத்தில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டமும், வெள்ளகோவில் நகர கழக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. கூட்டத்திற்கு காங்கேயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என். எஸ். என். நடராஜ் மற்றும் வெள்ளகோயில் நகர கழகச் செயலாளர் டீலக்ஸ் மணி ஆகியோர் தலைமை தாங்கினர். வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் டி ஆர் விஸ்வேஸ்வரன், மாநில எம் ஜி ஆர் மன்ற துணைச் செயலாளர் முத்துக்குமார், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கண்ணுச்சாமி, மாவட்ட மருத்துவர் அணி இணைச் செயலாளர் கே. சிவசங்கர் உள்ளிட்ட சுமார் 350 பேர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.