காங்கேயம் அருகே பாஜக நிர்வாகிகள் கூட்டம்

1பார்த்தது
காங்கேயம் அருகே பாஜக நிர்வாகிகள் கூட்டம்
சென்னிமலை சாலை நால்ரோட்டில் பாஜக காங்கேயம் வடக்கு ஒன்றியம் சார்பில் நிர்வாகிகள் மற்றும் சக்தி கேந்திர பொறுப்பாளர் கூட்டம் நடைபெற்றது. வடக்கு ஒன்றிய தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மோகனப்பிரியா சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். என்.டி.ஏ. கூட்டணி தேர்தலில் வெற்றி பெற செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகள் நடைபெற்றன. தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில தலைவர் கோபாலகிருஷ்ணன், வடக்கு ஒன்றிய தலைவர் குரு தேவராஜ் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி