திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே வட்டமலை கிராமத்தில், அரசு நிலத்தில் கோயில் கட்டி சிலர் பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், காங்கேயம் வட்டாட்சியர் கதிர்வேலிடம் புகார் மனு அளித்துள்ளார். இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.