காங்கேயம்: திமுக நிர்வாகி உணவக ஊழியர் கஞ்சா விற்பனை.. 2 பேர் கைது

57பார்த்தது
காங்கேயம்: திமுக நிர்வாகி உணவக ஊழியர் கஞ்சா விற்பனை.. 2 பேர் கைது
காங்கேயம் பேருந்து நிலையத்திற்கு எதிரே திருப்பூர் சாலையில் திமுகவின் முன்னாள் நகர செயலாளருக்கு சொந்தமான உணவகம் உள்ளது. இந்த உணவகத்தில் 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த உணவகத்தில் பீகார் மாநில தொழிலார்கள் ராஜேஷ் முக்கியா, பிரகாஷ் முக்கியா என 2 நபர்கள் தொழிலாளர்களாக  பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் உணவகத்தின் பின்புறமே அறைகள் எடுத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இவர்கள் தங்கியிருக்கும் பகுதியில் கஞ்சா விற்பனை  நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதை அடுத்து அங்கு சென்று சோதனை செய்த காவல் துறையினரிடம்  ராஜேஷ் முக்கியா, பிரகாஷ் முக்கியா என இரண்டு தொழிலாளர்கள் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அதில் அவர்களிடம் இருந்து விற்பனைக்கு வைத்திருந்த1. 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இருவரையும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். திமுக நிர்வாகி உணவகத்தில் பணிபுரியும் இருவரிடம் கஞ்சா பறிமுதல் செய்தது காங்கேயம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி