மாணவர்களுக்கு போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

1பார்த்தது
மாணவர்களுக்கு போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
வெள்ளகோவில் புனித அமலஅன்னை மேல்நிலைப்பள்ளியில் நேற்று போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட புகையிலை தடுப்பு பிரிவு அலுவலர் டாக்டர் சவுமியா தலைமை தாங்கினார். ஆலோசகர் பிரவீன் புகையிலை மற்றும் போதைப்பொருட்களால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்தும், மீளும் வழிமுறைகள் குறித்தும் விளக்கினார். காணொலி காட்சி மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கருப்பசாமி, சுகாதார ஆய்வாளர் கதிரவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி