காங்கேயம் தாராபுரம் வழியாக உடுமலைப்பேட்டை செல்லும் முன்னாள் முதல்வர் எடப்பாடி. கே. பழனிச்சாமி அவர்களுக்கு காங்கேயம் நகர, ஒன்றிய கழகம் சார்பில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
மாநகர மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வ. ஜெயராமன் தலைமையில் காங்கேயம், ஒன்றிய கழகச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.எஸ்.என். நடராஜ் மற்றும் நகர கழக செயலாளர் வெங்கு. ஜி. மணிமாறன், முன்னிலையில், திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார், உட்பட 500க்கும் மேற்பட்டோர் காங்கேயம் சென்னிமலை சாலையில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் பொதுச் செயலாளர் எடப்பாடி. கே. பழனிச்சாமி அவர்கள் தாராபுரம் வழியாக உடுமலைப்பேட்டை செல்கின்றார்.