வெள்ளக்கோவிலில் பள்ளி மாணவனை கடத்த முயன்ற ஜோசியக்காரன்

2பார்த்தது
வெள்ளகோவில் அருகே தீத்தம்பாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், 3 ஆம் வகுப்பு மாணவன் கவுஷிக் குடிநீர் தொட்டியில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தபோது, அவனை கடத்த முயன்றதாக மூலனூர் ஒரத்துபாளையத்தைச் சேர்ந்த ராசு (40) என்பவரை ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் பிடித்து வெள்ளகோவில் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். குடுகுடுப்பை மூலம் ஜோசியம் பார்த்து வரும் ராசு, மாணவனை எதற்காக கடத்த முயன்றார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி