திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில், பழைய கோட்டை சாலையில் உள்ள கணபதி நகர் பகுதியைச் சேர்ந்த கற்பகம் (55) என்பவர் பேருந்து நிலையம் எதிரே உள்ள வேன் ஸ்டாண்ட் சந்தில் நடந்து சென்றபோது, பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த 3.5 பவுன் தங்க நகையைப் பறித்துக்கொண்டு தப்பி ஓடினர். இது குறித்து காங்கேயம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.