திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே வெள்ளகோவில் அரசு பள்ளிகளில் சிலம்பம் பயிற்சி பெற்ற 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச சிலம்பப் போட்டியில் பங்கேற்று தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். இந்த வெற்றி பெற்ற மாணவர்களை வெள்ளகோவில் வந்தடைந்தபோது பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.